தலை முடி உதிர்வதைக் குறைத்து, சருமத்தை பளபளப்பாக்கும் 'லெமன் டீ'.. எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா?! - Seithipunal
Seithipunal



தினமும் காலை எழுந்ததும், இரவு தூங்கும் முன்னும் டீ , காஃபி குடிப்பதை பலரும் தங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது வாய்வு பிரச்சினை, தலைவலி, மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆனால் பலர் காலையில் எழுந்ததும் சூடான நீரில் எலுமிச்சை மற்றும் தேன் இரண்டையும், அல்லது இரண்டில் ஏதோ ஒன்று கலந்து குடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். உண்மையில் டீ , காபி குடிப்பதை விட இபப்டி எலுமிச்சை, தேன் கலந்து குடிப்பது அனைத்து விதமான செரிமானம் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். 

எலுமிச்சை மற்றும் தேன் கலந்த டீ எப்படி தயாரிப்பது?

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் 2 கப் தண்ணீரை ஊற்றி சூடாக்க வேண்டும். பின்னர் ஒரு ஏலக்காய் மற்றும் 2 கருப்பு மிளகை எடுத்து, அதை நன்கு இடித்து தூளாக்கி, அடுப்பில் உள்ள தண்ணீரில் போட்டு, நன்கு கொதிக்க விட வேண்டும். 

பின்னர் அதில் எலுமிச்சை சாறு, மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து அதை 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு, வடிகட்டி இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 

என்னென்ன நன்மைகள்?

* எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் இதை குடிக்கலாம். 

* இதனால் சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறுவதோடு, தலை முடி உதிர்வும் தடுக்கப் படுகிறது. 

* மேலும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருப்பதோடு, ரத்த அழுத்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lemon Tea Preparation and Benefits


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->