கிராமப்புறங்களில் மருத்துவம் மற்றும் சிறப்பு முகாங்கள் நடத்த வேண்டும்..அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாணவர்கள் ஸ்காலர்ஷிப்பை எப்படி விண்ணப்பிப்பது சம்பந்தமாக சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் எனவும் உள்ளாட்சித்துறை மூலம் கிராமப்புறங்களில்  சிறப்பு தூய்மை பணிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட வேண்டும் என புதுச்சேரி  மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அனைத்து துறை அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பாக 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி நாளை முதல் 24-ஆம் தேதி வரையில் "நல்லாட்சி வாரத்தை" (Good Governance Week) மிகச் சிறப்பாக கொண்டாட உள்ளன.  இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன்  தலைமையில் துணை ஆட்சியர் வினையராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றன. 

இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர்  குலோத்துங்கன், மத்திய மாநில அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு கொண்டு சேருவதற்கான விழிப்புணர்வு முகாம்களை இந்த குறிப்பிட்ட தினங்களில் நடத்த வேண்டும் எனவும் கல்வித்துறை மூலம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வங்கியில் சேமிப்பு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் மேலும் கல்லூரி மாணவர்களுக்கு எல். எல். ஆர். பழகுணர் உரிமம் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் இந்த நாட்களில் நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

மேலும் விவசாயிகளிடம் குறை தீர்ப்பு கூட்டங்கள் நடத்த வேண்டும் எனவும் கால்நடை பராமரிப்பு துறை மூலம் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் எனவும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாணவர்கள் ஸ்காலர்ஷிப்பை எப்படி விண்ணப்பிப்பது சம்பந்தமாக சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் எனவும் உள்ளாட்சித்துறை மூலம் கிராமப்புறங்களில் இந்த நாட்களில் சிறப்பு தூய்மை பணிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனைத்து துறை அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Medical and special camps should be conducted in rural areas District Collector orders officials


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->