பச்சை பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்.!
moong dal health benefits
பச்சை பயறில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க, முடி உதிர்வை தடுக்க பச்சை பயறு மிகவும் பயன்படுகிறது. இதிலுள்ள வைட்டமின் ஏ, பி, இ, மெக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
பச்சை பயறு மாவு, மஞ்சள், குப்பைமேனி இலை பொடி, பசும்பால் போன்றவற்றை கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் முடி வளர்வது நின்று முகம் பளபளக்கும்.
பச்சை பயறில் அதிக அளவு வைட்டமின் உள்ளதால் ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவை சீராகும்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் பச்சை பயறை சாப்பிடுவதால் ரத்தத்தின் சர்க்கரை அளவு குறையும். உடல் பருவனை குறைக்க பச்சை பயறு பெரிதும் உதவுகிறது.
English Summary
moong dal health benefits