மகப்பேறு அறுவை சிகிச்சை: வயிற்றுக்குள் துணியை வைத்து தைத்த சம்பவம்..!!!
Obstetric surgery Incident of sewing fabric inside the abdomen
மகப்பேறு அறுவை சிகிச்சைக்காக சென்ற பெண்ணின் வயிற்றில் சர்ஜிக்கல் மாப் எனப்படும், அறுவை சிகிச்சை துணியை வைத்து தைத்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

கர்நாடகா, மங்களூர் தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மகப்பேறு அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஆனால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் அப்பெண்ணிற்கு அதிக காய்ச்சல் காரணமாக மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது வயிற்றில் அசாதாரண உணர்வு இருப்பதாக அந்த பெண் கூறிய நிலையில், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுத்தனர். அதில் பத்து சென்டிமீட்டர் அளவில் ஏதோ ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் அந்த ரேடியோலஜிஸ்ட் கட்டி என்ற பொருள் இருப்பதாக தம்பதியினருக்கு தெரிவிக்கப்படவில்லை. மாறாக "ரத்த நாளங்களுக்கு வெளியே உள்ள திசுக்களில் ரத்தம் தேங்குவது குறிப்பாக ரத்தக்கட்டி" என தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள். இக்கட்டியானது காலப்போக்கில் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து காய்ச்சல் சற்று குறைந்தாலும், உடல் நிலை சரியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணினால் நிற்கவும், நடக்கவும், குழந்தைக்கு பால் கொடுக்கவோ முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார்.
இதனையடுத்து சிடி ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. அப்பெண்ணின் வயிற்றில் 10 சென்டிமீட்டர் அளவுள்ள அறுவை சிகிச்சை துணி இருந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களை தொடர்பு கொண்ட போது மருத்துவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மங்களூரில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனையில் அப்பெண்ணை அனுமதிக்கப்பட்டு, ஜனவரி 25ஆம் தேதி அன்று அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்த சர்ஜிக்கல் மாப் அகற்றப்பட்டது. பின்னர் பிப்ரவரி 15ம் தேதி மருத்துவமனையில் இருந்து அவர் டிச்சார்ஜ் செய்யப்பட்டாலும், தொடர்ந்து மருந்து உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மருத்துவரின் அதீத அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் குறித்து, தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். மனைவியின் சிகிச்சைக்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளனர். மேலும் மங்களூரை அதிரவைத்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Obstetric surgery Incident of sewing fabric inside the abdomen