மாதவிடாய் காலத்தில் வரும் உயிர்போகும் வலியை இப்படி சிம்பிளாக போக்குங்கள்.!  - Seithipunal
Seithipunal


மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கடுமையான வலி ஏற்படுவது வழக்கம். அவர்கள் அனுபவிக்கும் வலியை வார்த்தைகளில் கூறி விட முடியாது. அப்படிப்பட்ட வலியை போக்கக்கூடிய கசாயம் எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

பெருஞ்சீரகம் - ஒரு ஸ்பூன்
கட்டி பெருங்காயம் -  சிறிய துண்டு 
வெந்தயம் - அரை ஸ்பூன்
புதினா - நான்கு இலை
 பனைவெல்லம் - சிறிதளவு


 
செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதனுடன் பெருஞ்சீரகம், வெந்தயம், கட்டி பெருங்காயம், மூன்றையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்றாக கொதித்து,  ஒரு டம்ளர் அளவு வந்தவுடன் அதில் புதினா இலையை போட்டு, கீழே இறக்கும் நேரத்தில் பனை வெல்லத்தை போட்டு இறக்கவும்.  

பின்பு இதை வடிகட்டி வெது வெதுப்பாக இருக்கும் போது குடிக்கவும்.

இதை நமக்கு எப்போதெல்லாம் வயிறு வலி வருகிறதோ அப்போது குடித்தால் உடனடியாக வயிறு வலி நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Period pain Relief kashayam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->