இந்த வகை உணவுகளை சாப்பிட்ட பிறகு பால் குடிக்கக்கூடாது ஏன் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


பால் குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. அந்த வகையில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பால் நமது வாழ்க்கையில் முக்கிய உணவாக இருந்து வருகிறது.

பாலில் புரதம், கால்சியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான பால் நமது உடலில் உள்ள எலும்புகளை வலுவடைய செய்கிறது. அதன் காரணமாக எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

நமது உடல் ஆரோக்கியத்திற்கு பால் மிகவும் அவசியம் என்றாலும் பாலுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

அந்த வகையில் அசைவ உணவுகளை சாப்பிட்டு பிறகு பால் குடிப்பது உடலுக்கு நல்லதல்ல. குறிப்பாக மீன் உணவுகளை சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதால் செரிமான கோளாறுகளை ஏற்படுகிறது. அதன் காரணமாக மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேபோல் கீரையுடன் பால் சேர்த்து சாப்பிடக்கூடாது. கீரையில் செல்லுலோஸ் அதிகம் உள்ளதால் செரிமானம் ஆக அதிக நேரம் ஆகும். அப்போது பால் குடிப்பதால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தயிர் மோர் போன்ற உணவுகளை சாப்பிட பிறகு பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அவர் சாப்பிட்டால் வயிற்று கோளாறு வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

தர்பூசணி பழம் சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் வாயு தொல்லை ஏற்படும் .

உடல் எடை கூட பாலுடன் வாழைப்பழங்களை சாப்பிட்டால் நல்லது என பலர் கூறுகின்றனர். ஆனால் வாழைப்பழங்கள் பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் ஜீரணமாக அதிக நேரம் ஆகும். இது செரிமான பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

மேலும் பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிக புரதம் இருப்பதால் இரண்டையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது. அவர் சாப்பிட்டால் செரிமான பிரச்சினைகள் ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Some foods eat after don't drink milk


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->