கத்திரிக்காயை இவர்கள் எல்லாம் சாப்பிட்டால்.. அவ்வளவு தான்.! ஏன் தெரியுமா.?
They Do Not Eat Brinjal
கத்திரிக்காய் குழம்பு வறுவல் பொரியல் என எந்த வகையில் சமைத்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடலாம். ஆனால் உடலில் சில குறிப்பிட்ட பிரச்சினை இருப்பவர்கள் மட்டும் கத்திரிக்காயை சாப்பிட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஏனென்றால் கத்திரிக்காயில் உள்ள என்சைம்கள் சில நேரங்களில் தோல் உள்ளிட்ட உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். அந்த வகையில் யாரெல்லாம் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
கண் எரிச்சல் மற்றும் கண் தொடர்பான நோய் உள்ளவர்கள் கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது. இது கண் தொடர்பான பிரச்சனையை மேலும் அதிகமாக்கும்.
தோல் அலர்ஜி உள்ளவர்கள் கத்திரிக்காயை சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். அலர்ஜி இருப்பவர்கள் சாப்பிட்டால் மேலும் அதிகரிக்கும் என்பதை குறிப்பிடத்தக்கது.
கத்திரிக்காயில் சிறுநீரகத்திற்கு பிரச்சினையை ஏற்படுத்தும் ஆக்சலேட் அமிலம் இருப்பதால் பித்தப்பையில் கல் உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே கத்திரிக்காயை தவிர்ப்பது நல்லது.
பைல்ஸ் நோயல் அவதிப்படுபவர்கள் கத்திரிக்காயை சாப்பிடுவதை தவிர்த்த வேண்டும்.குறிப்பாக பெண்கள் கர்ப்ப காலத்தில் கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது. இந்த நேரத்தில் கத்திரிக்காய் சாப்பிட்டால் வளரும் கருவுக்கு தீங்குகளை வைக்கும்.