கருப்பைத் தொற்றால் அவதியா? - இதை மட்டும் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.!
tips of clear Uterine infection
பெண்களின் ஆரோக்கியத்திற்கு கருப்பை தொற்று ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த தொற்று கருப்பையின் உள் அடுக்குகளில் ஏற்படுவதுடன் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்தத் தொற்று ஏற்பட்டால் பெண்களின் உணவில் என்னென்ன விஷயங்களைச் சேர்க்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
* உடலில் தொற்று ஏற்பட்டால் முதலில் மஞ்சளைப் பயன்படுத்தலாம். இந்த மஞ்சள் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை உணவில் சேர்ப்பதன் மூலம் தொற்று மற்றும் கருப்பையில் உள்ள பிற பிரச்சனைகளை அகற்றவும், கருப்பையில் வீக்கத்தில் இருந்து நிவாரணமும் அளிக்கிறது.
* பச்சைக் காய்கறிகளில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ளிட்டவை உள்ளது. இது உங்கள் கருப்பையின் தொற்றுநோயை அகற்ற உதவுகின்றன. இதேபோல், கீரையில் உள்ள ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதுடன் பெண்களின் கருப்பையின் செல்களை மீண்டும் உருவாக்க உதவுகிறது.
* கருப்பைத் தொற்று நோய்க்கு பூண்டு முக்கியமாக உள்ளது. இதில் உள்ள அல்லிசின் என்ற தனிமம் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
* உடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தயிர் உதவுகிறது. இது செரிமான அமைப்பு மற்றும் இனப்பெருக்க அமைப்பில் பாக்டீரியா சமநிலையை பராமரிக்கிறது. இதன் மூலம் கருப்பையில் தொற்று ஏற்படும் அபாயம் குறையும்.
* இதுமட்டுமல்லாமல், பெண்கள் கருப்பையில் தொற்று ஏற்பட்ட உடன் கிரீன் டீ, இஞ்சி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
English Summary
tips of clear Uterine infection