உரிய ஆவணம் இல்லாத ரூ.1.12 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், பணம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.1.12 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது எஸ்.பி.ரோட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் பைகளுடன் சுற்றிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்பொழுது அவர்களிடமிருந்த பைகளில் சோதனை நடத்தியதில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், அவரது பெயர் கணேஷ் என்பதும், நகை மற்றும் பணத்திற்கு உரிய எந்த ஆவணங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ 800 கிராம் தங்கம் நகைகள் மற்றும் ரூ.22 லட்சம் ரொக்க பணத்தை கைப்பற்றினர்.

மேலும் இதுகுறித்து போலீசார் கணேஷிடம், நகை மற்றும் பணத்தை எங்கு எடுத்துச் சென்றார்? யாருக்கு சொந்தமானது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 crore Gold and cash seized for without proper document in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->