2030-க்குள் இந்தியாவில் 10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியுமா? PHDCCI..!! - Seithipunal
Seithipunal


வருகின்ற 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகளை  உருவாக்கும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது. மோடி மூன்றவது முறையாக பதவி ஏற்ற பிறகு தனது அமைச்சரவைக்கு 100 நாள் நிகழ்ச்சி நிரலுக்கு 10 முக்கியமான செய்திகளை தொழில்துறை அமைப்பு பரிந்துரைத்துள்ளது. 

அதில் வருகின்ற 2030ஆம் ஆண்டுக்குள் 10 கோடிக்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகளை இந்தியா உருவாக்கும் சாத்தியம் இருப்பதாக PHDCCI தெரிவித்துள்ளது. வருகின்ற 2030 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்யில் 3.3 டிரில்லியன் டாலர்களை குவிக்கும் என்று தொழில்துறை அமைப்பு கூறியது.

PHDCCI தலைவர் சஞ்சீவ் அகர்வால் இதைபற்றி பேசுகையில், "MSMEகள், பெரிய குழுக்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் உட்பட பல துறைகளில் 2030 ஆம் ஆண்டிற்குள் 10 கோடிக்கும் அதிகமான வேலைகளை உருவாக்குவதற்கான வரைபடத்தை நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். தொழில்துறை அமைப்பான PHD Chamber of Commerce and Industry (PHDCCI) 2030 ஆம் ஆண்டிற்குள் 10 கோடிக்கும் அதிகமான புதிய வேலைகளை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் இந்தியாவிற்கு உள்ளது என்று கூறினார். 

புதிய மோடி 3.0 அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டத்தில் 100 நாள் நிகழ்ச்சி நிரலுக்கு தொழில்துறை இலாகாவுக்கு பரிந்துரைத்துள்ள 10 புள்ளிகள் வேலைவாய்ப்பு உருவாக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சி, ஏற்றுமதிப் சந்தையை வலுப்படுத்துதல், நாட்டின் விவசாயத் துறையை மேம்படுத்தும் கொள்கை, பணவீக்க உயர்வை நிவர்த்தி செய்தல், டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், பெண்களை வலுப்படுத்துதல் அதிகாரமளித்தல் ஆகிய ஆலோசனைகள் பரிந்துக்கபட்டது.

இதை பற்றி PHDCCI தலைவர் சஞ்சீவ் அகர்வால் பேசுகையில், "தொற்றுநோய்க்குப் பிறகு அதிக வளர்ச்சி விகிதம் பல ஆண்டுகளாக கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது. நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வலுப்படுத்த புதிய தொழில் கொள்கை இந்த நேரத்தில் தேவைப்படுகிறது. உலக ஏற்றுமதியில் தனது பங்கை அதிகரிக்க இந்திய அரசு 75 தயாரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்குள் $2 டிரில்லியன் ஏற்றுமதி இலக்கை அடைய இந்த 75 தயாரிப்புகள் முக்கியமானதாக இருக்கும்". என்று கூறினார்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 crore job opportunity in india


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->