நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம்... 10 மாநில சட்டசபை தேர்தல் எப்போது..?? - Seithipunal
Seithipunal


கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பாஜக குஜராத்தில் வரலாற்றுச் சாதனையுடன் ஆட்சி அமைத்தது. அதே நேரத்தில் ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆட்சி செய்து வந்த பாஜக காங்கிரஸிடம் ஆட்சியை இழந்தது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு 10 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 

வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மூன்று மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. திரிபுராவில் பாஜகவும், நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியும், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியும் ஆட்சி செய்கின்றன. 

அதேபோன்று கர்நாடகாவில் வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் பதவிக்காலம் மே 24ஆம் தேதி உடன் முடிவடைகிறது. அதே போன்று 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் முடிவடைகிறது. இதனால் 5 மாநிலங்களிலும் தேர்தல் ஒன்றாக நடைபெற வாய்ப்புள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜகவும், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸும், தெலுங்கானாவில் ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் ஆட்சி செய்கின்றன.

அதே போன்று ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் இந்த ஆண்டு சட்டர் பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தற்பொழுது வரை தேர்தல் நடைபெறாத நிலையில் கடந்த நவம்பர் மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் வரும் மே மாதம் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த 10 மாநில தேர்தல்களின் முடிவுகள் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவை தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 state assembly elections will be preview of parliamentary elections


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->