குவைத் தீ விபத்து : கேரளாவைச் சேர்ந்த 11 பேர் பலியான சோகம்..!! - Seithipunal
Seithipunal


உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து வந்து பல்வேறு கலாச்சாரத்தை சேர்ந்த மக்கள் பணியாற்றும் நாடு தான் குவைத். இது வளைகுடா நாடுகளில் ஒன்றாக உள்ளது. மேலும் அங்கு சென்று பணியாற்றும் மக்களில் பலர் தனியாகவும், மேலும் பலர் குடும்பத்துடனும் அங்கேயே வசித்து வருகின்றனர்.

அவற்றில் சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தங்குவதற்கான குடியிருப்புகளையம் ஏற்பாடு செய்துதருகின்றன. அந்த வகையில் குவைத்தில் உள்ள என். பி. டி. சி நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்காக குவைத்தில் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்திற்குட்பட்ட மங்காப்பில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை ஏற்பாடு செய்து தந்துள்ளது. இந்நிறுவனத்தில் ஏரளாமான இந்தியர்களும் பணியாற்றுகின்றனர். 

மேலும் மங்காப்பில் உள்ள இந்த நிறுவனத்தின் குடியிருப்பில் 6 மாடிகள் உள்ளன. மேலும் இதில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு அனைவரும் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் திடீரென அந்த குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது. புகையில் மூச்சு திணறியும், தீயில் கருகியும், மேலும் சிலர் தங்களை காத்துக் கொள்ள மாடியில் இருந்து கீழே குதித்தும் ஆபத்தான நிலையில் இருந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுவரை  50 பேர் பலியானதாக கூறப்படும் இவ்விபத்தில் 42 பேர் இந்தியர்கள் என்றும், அதில் கேரளாவை சேர்ந்த 11 பேர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 Kerala Peoples Died in Kuwait Fire Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->