Telangana: தாயின் சடலத்துடன் இறுதிச்சடங்கு செலவுக்காகப் பிச்சையெடுத்த 11 வயது மகள்! - Seithipunal
Seithipunal


கணவர் 12 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்த நிலையில் விவசாய தினக்கூலியாக வேலை செய்து தனது ஒரே மகள் துர்காவை [11 வயது] வளர்த்து வந்தார்.

வீட்டில் சீலிங் காத்தாடியில் தாய் கங்காமணி தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்டு துர்கா செய்வதறியாது திகைத்துள்ளார்

தெலுங்கானாவில் தனது தாயின் சடலத்துக்கு அருகில் அமர்ந்து இறுதிச் சடங்கு செலவுக்காக 11 வயது சிறுமி யாசகம் வேண்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் தன்னூர் [Thanoor] மண்டலத்தில் உள்ள பெல்தரோடா [Bheltharoda] கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காமணி [35 வயது]. இவரது கணவர் 12 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்த நிலையில் விவசாய தினக்கூலியாக வேலை செய்து தனது ஒரே மகள் துர்காவை [11 வயது] வளர்த்து வந்தார். துர்கா பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

நேற்று முன்தினம் துர்காவை கங்காமணி கண்டித்து பேசியுள்ளார். இதனால் துர்கா கோபித்துக்கொண்டு தனது பெரியம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வீட்டில் சீலிங் காத்தாடியில் தாய் கங்காமணி தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்டு துர்கா செய்வதறியாது திகைத்துள்ளார். பக்கத்துக்கு வீட்டுக் காரர்களிடம் சென்று துர்கா கூறவே, அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்தான் தாயின் இறுதிச்சடங்கிற்குப் பணம் இல்லாததால் வீட்டின் முன் இருந்த வீதியில் தாயின் சடலத்தைக் கிடத்தி இறுதிச்சடங்கு செலவுக்குக் காசு வழங்கும்படி வருவோர் போவோரிடம் யாசகம் வேண்டியுள்ளார். இதை அறிந்த உள்ளூர் போலீஸ் சிலரும், துர்காவின் ஆசிரியர்களும், பிஆர்எஸ் முன்னாள் அமைச்சர் கேடிஆர் அருவுறுத்தலின் பேரில் அப்பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் சிலரும் காசு வழங்கிக் கங்காமணியின் இறுதிச் சடங்கைச் செய்ய உதவியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

11-year-old daughter begs for funeral expenses with her mother's corpse!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->