அதிர்ச்சி.! கேரளாவில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
128 peoples affected corona in kerala
இந்தியாவில் கடந்த சில மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கேரளா மாநிலத்தில் கொரோனா தாண்டவம் ஆடுகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று காலை எட்டு மணி நேர நிலவரப்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்,128 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதனால், கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,000 ஆக உயர்ந்து உள்ளது.
நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 296 ஆக உள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் பேசியதாவது:-
"கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், பயப்பட வேண்டியது இல்லை. வைரஸ் தொற்றுநோய்களை நிர்வகிக்க மருத்துவமனைகள் போதுமான அளவில் உள்ளன" என்றுத் தெரிவித்தார்.
English Summary
128 peoples affected corona in kerala