மம்தாவுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்; டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு திரிணாமுல் ஆதரவு..! - Seithipunal
Seithipunal


டெல்லி சட்ட சபைக்கு பிப்ரவரி 05-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்துள்ளார். டெல்லி சட்டசபை மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்டது.  தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 08-ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சிக்கு, சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இதனால் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிற்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறது என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதையடுத்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமுல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக,கெஜ்ரிவால் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ள செய்தியில், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி. கட்சிக்கு ஆதரவளித்த, மேற்கு வங்க முதல் மந்திரி மம்தாவுக்கு நன்றி. நீங்கள் நல்ல நேரத்திலும், சிக்கலான நேரத்திலும் எப்போதும் ஆதரவாகவும், ஆசியும் அளித்து உறுதுணையாக இருந்துள்ளீர்கள். நன்றி என்று என பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kejriwal thanked Mamata Banerjee


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->