இந்திய இருமல் மருந்தில் விஷம்? 2 வருடத்தில் 141 குழந்தைகள் பலி! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களுக்கு முன்பு உஸ்பெகிஸ்தான் நாட்டில் குறிப்பிட்ட சில இருமல் மருந்து உட்கொண்டு குழந்தைகள் இறந்ததால் அந்நாட்டு அரசு தீவிர விசாரணையில் இறங்கியது. அதில் இருமல் மருந்துகள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உஸ்பெகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படட்டது. இதனை எடுத்து உலகம் முழுவதும் இந்திய தயாரிப்பு இருமல் மருந்துகளுக்கு உபயோகத்திற்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.

இதேபோன்று கடந்த ஆண்டு ஜாம்பியா, கேமரூன் உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகள் இறந்த போனதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் தான் காரணம் என உறுதி செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களில் உலகம் முழுவதும் சுமார் 141 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய இருமல் மருந்தில் டை எத்லைன் க்ளைகால் அல்லது எதிலின் க்ளைகால் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அறிக்கை தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் எந்த நாடுகளில் எல்லாம் இந்திய மருந்து புழக்கத்தில் இருக்கிறது என்பதை கண்காணிப்பு அமைப்பு ஆராய்ந்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு மருந்து உற்பத்தி ஆலையில் கடந்த மாதம் அம்மாநில மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக ஆணையர் கோஷியா ஆய்வுக்கு பின்னர் இருமல் மருந்து உற்பத்திக்கு தடை விதித்தோடு விசாராணை நடைபெற்று வருகிறது.

எந்த மருந்தில் எந்தெந்த மூலப்பொருள் அளவுக்கு மீறினால் நஞ்சாகும் என்பது பற்றி உலக சுகாதார நிறுவனம் வரையறையை நிர்ணயித்துள்ளது. டை எத்லைன் க்ளைகால் மற்றும் எத்லின் க்ளைக்கால் வரையறுக்கப்பட்ட அளவை விட ட்ரைமேக்ஸ் எக்ஸ்பெக்டோரன்ட் & ஸைல்ப்ரோ ப்ளஸ் சிரப் ஆகிய இருமல் மருந்தில் அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் கண்டறிந்துள்ளது. இது குறித்தான விவரங்களை தனது வலைதளத்திலும் வெளியிட்டுள்ளது. மேலும் வேறு சில மருந்து நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

141 children died in 2years due to Indian cough medicine


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->