உ.பியில் பிரபல ரவுடி சுட்டு கொலை - மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


உ.பியில் பிரபல ரவுடி சுட்டு கொலை - மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு.!

உத்தரபிரதேசத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏவான ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் இந்த வழக்கில் ஆதிக் அகமது மற்றும் அவரது மகன் ஆசாத், நண்பர் குலாம் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இவர்கள் குறித்து தகவல் அளித்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்திருந்தது. இதையடுத்து ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது நண்பர் குலாம் உள்ளிட்டோர் கடந்த 13ஆம் தேதி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இதைத் தொடர்ந்து, நேற்று இந்தக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமாகிய ஆதிக் அகமது மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால், இந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவத்தினால், உத்தரபிரம் மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளில் போலீசார்களும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 ban on uttar pradesh for rowdy adiq ahmed kill


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->