#மாண்டஸ் புயல் :: புதுச்சேரி முழுவதும் 144 தடை உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 10ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு துறைகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் புதுச்சேரிக்கு வந்துள்ள பேரிடர் மீட்பு குழுவினர் தாழ்வான பகுதிகளை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக மணிக்கு 50 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பேனர்கள், ப்ளக்ஸ், கட் அவுட்டுகள், விளம்பர பதாகைகள் வைக்க மாவட்ட ஆட்சியர் வல்லவன் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக நேற்று இரவு முதல் புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும் பணியில் போலீசாரும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களும் களமிறங்கியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 Prohibitory Order in Puducherry due to Cyclone


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->