அதிர்ச்சி தகவல்! போதைப்பொருள்களுக்கு கடந்த 14 நாட்களில் 15 இளைஞர்கள் பலி! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள்களுக்கு கடந்த 14 நாட்களில் 15 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் போதை போதை பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்துவதும் விற்பனை செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தநிலையில், பஞ்சாபில் போதை பொருள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பாலிவுட்டில் உடுதா பஞ்சாப் என்னும் பெயரில் திரைப்படமும் வெளியாகி பிரபலமானது. இதற்கு பஞ்சாப் எல்லைகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ட்ரோன் மூலம் போதைப் பொருட்களை வீசுவது காரணமாக கூறப்படுகிறது.

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் நடவடிக்கைகள் பலன் அளிக்காத நிலை உள்ளது. இதற்கு முன் நடைபெற்ற ஆட்சிகளிலும் இதனை தடுக்க முடியவில்லை என புகார்கள் எழுந்துள்ளது.

பஞ்சாபில் இருந்து பிற மாநிலங்களுக்கு தொடர்ந்து போதைப் பொருள் கடத்தப்பட்ட வருவதாக புகார்கள் எழுந்து உள்ளது. இந்த நிலையில், போதைப்பொருள்களை தடுக்க தவறிய சுமார் 10,000 போலீசாரை உடனடியாக இடமாற்றம் செய்ய முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாபில் போதைப் பொருள்களுக்கு கடந்த 14 நாட்களில் 15 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பஞ்சாப் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 youths have died due to drugs in the last 14 days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->