உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!150 ஆண்டு பழமை வாய்ந்த பாலம் இடிந்தது! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தில் 150 ஆண்டு பழமை வாய்ந்த ஆங்கிலேயர் கால பாலம் இடிந்து விழுந்த சம்பவம் இந்திய முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கான்பூர்-உன்னாவ் இடையே கங்கை ஆற்றின் குறுக்கே 1874ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 150 ஆண்டுப் பழமை வாய்ந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இப்பாலம் சுக்லகஞ்ச் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கங்கை ஆற்றை கடக்க பிரதான பாதையாக இருந்தது. ஆனால், பாலத்தின் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, 2021ஆம் ஆண்டில் அரசு இந்த பாலத்தை மூடி போக்குவரத்துக்கு தடை விதித்தது.

சம்பவம் அதிகாலை நேரத்தில் நிகழ்ந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. விரிசல் ஏற்பட்ட 2, 10, 17, மற்றும் 22வது தூண்கள் காரணமாக பாலத்தின் ஒரு பகுதி முழுமையாக இடிந்து விழுந்தது.

இந்தச் சம்பவத்தை அறிந்த மக்கள் திரண்டு வந்து, பாலத்தின் நிலைமை குறித்து பார்வையிட்டு, சிலர் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அவை தற்போது வைரலாகி வருகின்றன.

பாலம் இடிந்து விழுந்த இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், இந்த பாலத்தின் வரலாற்றுப் பின்னணி மற்றும் சீரமைப்பு தொடர்பாக அரசின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

150 years old bridge collapsed in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->