அனல் பறக்கும் தேர்தல் களம் - மஹாராஷ்டிராவில் ரூ.16.34 கோடி மதிப்பிலான நகை, பணம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு வருகிற 20-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட உள்ள இந்தத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இந்த நிலையில், தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் ரூ.16.34 கோடி மதிப்பிலான நகை, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதில் ரூ.3.05 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.1.04 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ.9.01 கோடி மதிப்பிலான பணம் ஆகியவை அடங்கும். 

அதிகளவிலான பொருட்கள் கதக்வாஸ்லா, ஷிரூர் மற்றும் போசாரி சட்டசபை தொகுதிகளில் கைப்பற்றப்பட்டுள்ளது. அம்பேகாவன் தொகுதியில் குறைந்த மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 

தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக 22 புகார்களில் 2 புகார்கள் தவிர மற்றவை தீர்க்கப்பட்டு விட்டன என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

16 crores worthable money and gold seizes in maharastra


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->