திருப்பதி எழுமலையான் கோயில்.. ஒரே மாதத்தில் ரூ.166.14 கோடி காணிக்கை செலுத்திய பக்தர்கள்.!
166 crores collected in Thirupathi Elumalayan Temple in June month
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாதத்தில் மட்டும் பக்தர்கள் ரூ.166.14 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், உலக பிரசித்தி பெற்ற இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தலைமுடியை காணிக்கை செலுத்துகின்றனர். மேலும், பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கணக்கில்லாமல் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஜுன் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 20 லட்சத்து 187 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ.166.14 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
English Summary
166 crores collected in Thirupathi Elumalayan Temple in June month