டெல்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மிக்கு ஆதரவுக்கு தெரிவிக்கும் உத்தவ் சிவசேனா ..!
Uddhav Shiv Sena announces support for Aam Aadmi Party in Delhi Assembly elections
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவும் ஆதரவளித்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 05-ந் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இந்நிலையிலேயே, ஆம் ஆத்மி கட்சிக்கு, உத்தவ் சிவசேனாவும் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் அந்த கட்சியின் எம்.பி. அனில் தேசாய் கூறுகையில், " மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலலைமையிலான ஆம் ஆத்மி எங்களுக்கு ஆதரவாக இருந்தது.
எனவே நாங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்கிறோம். " என்று கூறியுள்ளார். அத்துடன், அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவரை, காங்கிரஸ் கட்சி துரோகி என கூறுவது, தங்களுக்கு வருத்தம் அளிப்பதாக உத்தவ் தாக்கரே எம்.பி. சஞ்சய் ராவத் மேலும், கூறியுள்ளார்.
English Summary
Uddhav Shiv Sena announces support for Aam Aadmi Party in Delhi Assembly elections