நீட் தேர்வு முறைகேடு : மேலும் 2 பேர் பாட்னாவில் கைது..!!
2 Arrested in Patna on NEET Malpractice
நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக கூறி சிபிஐ அதிகாரிகள் பாட்னாவில் 2 பேரை கைது செய்துள்ளனர். முன்னதாக பாட்னா போலீசார் 13 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.
முன்னதாக கடந்த மே 5 ம் தேதி நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதையடுத்து தேர்வெழுதிய மாணவர்களில் குறிப்பிட்ட 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
இதனால் கொதித்தெழுந்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் மத்திய அரசு இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விசாரணையை துவங்கிய சிபிஐ அதிகாரிகள் , இது குறித்து விசாரிப்பதற்காக பீகார் மாநிலத்திற்கு சென்றனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் மணீஷ் குமார் மற்றும் அஷுதோஷ் குமார் என இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களை டெல்லி அழைத்து சென்று விசாரிப்பதகற்கான நடவடிக்கையில் சிபிஐ அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 6 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்துவதாகவும், விரைவில் அவர்களும் கைது செய்யப் படலாம் என்றும் தெரிய வந்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் கைது செய்யப் பட்ட 13 பேர் பாட்னா போலீசாரால் கைது செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ கைக்கு வந்தவுடனேயே தற்போது இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
English Summary
2 Arrested in Patna on NEET Malpractice