ஜம்மு காஷ்மீர் || கையெரி குண்டு வீசி தாக்குதல்.! 2 வெளிமாநில தொழிலாளர்கள் பலி.!
2 foreign workers killed in Jammu and Kashmir grenade attack
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து நேற்று நள்ளிரவு கையெறி குண்டு வீசி பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் சோபியானின் ஹர்மன் பகுதியில் உத்தரபிரதேச மாநிலம் கன்னுஞ் மாவட்டத்தை சேர்ந்த மோனிஷ் குமார் மற்றும் ராம் சாஹர் ஆகிய 2 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு உறங்கிக்கொண்டிருந்தபோது, இவர்களை குறிவைத்து பயங்கரவாதி நேற்று இரவு கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த குண்டு வீச்சு தாக்குதலில் உறங்கிக்கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளிகள் மோனிஷ், ராம் ஆகிய 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலையடுத்து சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பயங்கரவாதியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையில் வெளிமாநில தொழிலாளிகள் மீது கையெறி குண்டு வீசிய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியான இம்ரான் பஷிரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஹர்மனை சேர்ந்த இம்ரான் பஷீர் கனி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
2 foreign workers killed in Jammu and Kashmir grenade attack