உ.பி: கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 2 தொழிலாளர்கள் பலி, 8 பேர் காயம் - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி நகரின் ரூப் நகர் பகுதியில் ஒரு தொழிற்சாலையின் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் 15 தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென தொழிற்சாலை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர், காயமடைந்த 8 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் சமீர் மற்றும் ராஜேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக டிசிபி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 labourers killed and 8 injured as under construction building collapses in Uttarpradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->