நீட் வினாத்தாள் கசிவு!மெயின் சப்ளையே இவர்தானாம்! முக்கிய குற்றவாளி கைது! - Seithipunal
Seithipunal


நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக முக்கிய குற்றவாளி உட்பட இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு நடந்த மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக நீட் வினாத்தாள் கசிவு சம்பவம் நடைபெற்றது. நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றப்பட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்தந்த மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிஐ நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 12 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இந்தநிலையில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மேலும் ஒரு முக்கிய குற்றவாளி உட்பட இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

ஜார்கண்ட் இருந்து நீட் தேர்வு வினாதாளை திருடி கசியவிட்டு முக்கிய குற்றவாளி என என்ஜினியர் பங்கஜ்குமார் என்ற ஆதித்யாவை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 people arrested in connection with the NEET question paper leak


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->