உ.பி: ஏற்றுமதி இறைச்சி தொழிற்சாலையில் விபத்து - 2 தொழிலாளர்கள் பலி - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள ஏற்றுமதி இறைச்சி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள இறைச்சி தொழிற்சாலையின் கழிவு மேலாண்மை மையத்தில் தவறுதலாக ஒரு தொழிலாளி விழுந்துள்ளார். அப்பொழுது அவரை காப்பாற்றுவதற்கு மூன்று தொழிலாளிகள் முயன்ற நிலையில் இரண்டு தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த இரு தொழிலாளர்களை மொராதாபாத்தில் உள்ள காஸ்மோஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் பலியானவர்கள் அசாமை சேர்ந்த பைசுல் அலி மற்றும் உத்தரபிரதேச மாநிலம் கஞ்ச் பகுதியை சேர்ந்த ஃபாசில் அலி என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 workers killed in UP export meal factory


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->