புறாக்களுக்கு இரை வைப்போருக்கு ரூ.200 அபராதம் - அறிவிப்பு பலகையால் பொதுமக்கள் அதிர்ச்சி.!
200 rupees fine to peoples for food imposed pigeons
கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரின் இதய பகுதியில் குதிரை பந்தய மைதானம் அமைந்துள்ளது. அந்த சாலைக்கு ரேஸ்கோர்ஸ் சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரேஸ்கோர்ஸ் சந்திப்பு பகுதிக்கு தினமும் நூற்றுக்கணக்கான புறாக்கள் வருகின்றன. அவ்வாறு வரும் புறாக்களுக்கு அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள், குதிரை பந்தயத்தை காண வருபவர்கள், அக்கம்பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் இரை வைத்து வருகின்றனர்.
இதனால், அந்த பகுதியில் எந்த நேரமும் நூற்றுக்கணக்கான புறாக்கள் ஒன்று கூடி இரை தின்று வருகின்ற நிலையில் தொழிலாளர்களால் அங்கு வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அந்தப்பகுதியில் கழிவுகள் சேர்வதுடன் துர்நாற்றம் வீசுவதாகவும், தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ரேஸ்கோர்ஸ் சந்திப்பு பகுதியில் புறாக்களுக்கு இரை, தண்ணீர் வைப்போருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று பெரிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், புறாக்களுக்கு இரை வழங்குவது குற்றமா?, எந்த துறையிடம் அனுமதி பெற்று ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று பலகை வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டு பொதுமக்கள் தகராறு செய்து வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
200 rupees fine to peoples for food imposed pigeons