வீட்டில் இருந்தபடி மாதம் 20 ஆயிரம் சம்பாதிக்கலாம் - இதைமட்டும் செய்யுங்கள் போதும்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு மூத்த குடிமக்களை கருத்தில் கொண்டு அஞ்சல் அலுவலகம் மூலம் அவர்களது முதுமை காலத்தில் உதவும் வகையில் “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை” சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணையும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,500 வருமானமாக வழங்கப்படும்.

அதாவது இந்தத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு மாதம் ரூ.20,500 வட்டியாக மத்திய அரசு மூலம் செலுத்தப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தின் பலனை 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே பெற முடியும். அதுமட்டுமல்லாமல் இந்தப் பலனை சூப்பர் ஆனுவேஷன், விஆர்எஸ் அல்லது சிறப்பு விஆர்எஸ் பெற்றவர்களும் பெறலாம்.

இந்தத் திட்டத்தில் இணையும் நபர்கள் 1000 மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதவாது பயனர்கள் 1,000 ரூபாய் முதல் 30 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். இவ்வாறு முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு அரசானது 8.2% வட்டி வழங்குகிறது. 

இந்த வட்டி தொகையானது ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் உள்ளிட்ட மாதங்களில் பயனர்களின் கணக்கில் செலுத்தப்படும். இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும், வருமான வரி சட்ட பிரிவு 80C-ன் படி, பயனர்கள் 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறுவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20000 income per month post office scheme


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->