நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்!பாராளுமன்றத்தில் தகவல்! - Seithipunal
Seithipunal


கடந்த 10 ஆண்டுகளில் 12 போலி பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. தற்போது 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்கள் அங்கிகாரம் பெறாதவை, எனவே அவற்றில் பட்டங்கள் பெறுவது செல்லாது. மாணவர்கள் அவற்றில் சேரக்கூடாது என்று மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுகந்த மஜும்தார் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் எம்.பி.க்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் கேட்டார். மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கூட இந்த பல்கலைக்கழகங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி மனிதன்-விலங்கு மோதலில், அந்தமட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு உயர்த்தி வழங்கப்படுமா என்பதை கேட்டார். மத்திய சுற்றுச்சூழல்துறை மந்திரி பூபேந்திர யாதவ் பதில் அளித்து, வயநாட்டில் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன என்றும், விவரங்கள் எம்.பி.க்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.

இந்தியாவில் 6,138 பெரிய அணைகள் உள்ளன. இதில் 1,065 அணைகள் 50 முதல் 100 ஆண்டுகள் பழமையானவை, 224 அணைகள் 100 ஆண்டுகள் பழமையானவை என்று மத்திய ஜல்சக்தி இணை மந்திரி ராஜ்பூஷன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி டோகான் சாகு "பிரதமரின் ஸ்வநிதி" திட்டத்தின் கீழ் ₹50,000 வரை கடன் வழங்கப்படுவதாக கூறினார். இதுவரை ₹13,422 கோடி மதிப்பிலான 94 லட்சத்து 31 ஆயிரம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.அரசியல் சாசனம் மீதான விவாதம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே மோடி அரசின் செயல்பாடுகளை குற்றம் சாட்டி, அரசியல் சாசனத்தை அழித்துவிட்டதாக கூறினார். தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா மத்திய அரசின் நிதி வினியோகத்தை தேவைக்கேற்ப செய்ய வேண்டும் என்றும், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை எதிர்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 fake universities across the country Information in Parliament


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->