நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி..ஜெர்மன் அதிபர் பதவியை இழந்தார் ஓலாஃப் ஷோல்ஸின்! - Seithipunal
Seithipunal


ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் கூட்டணி அரசாங்கம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளது.இதனால் பிப்ரவரியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.394 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தனர். அரசாங்கத்திற்கு ஆதரவாக 207 பேர் வாக்களித்தனர்.

ஜெர்மன் அதிபராக இருப்பவர் ஓலாப் ஸ்கோல்ஸ். கடந்த 2021ல் நடந்த தேர்தலில் அவரது கூட்டணி ஆட்சி அமைந்தது. அவர் கொண்டு வந்த பொருளாதார சட்டங்களுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை வாபஸ் பெற்றன. இதனால் ஆளுங்கட்சி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டு பார்லிமென்டில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் தோல்வி அடைந்தார்.

733 இடங்களைக் கொண்ட கீழ்சபையில் அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் 207 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று தோல்வி அடைந்தார். அதேநேரத்தில், 394 உறுப்பினர்கள் எதிராக ஓட்டளித்தனர். 116 பேர் ஓட்டளிப்பை புறக்கணித்தனர். இதனால் அவர் வெற்றி பெற தேவையான 367 பெரும்பான்மையை விட மிகக் குறைவாகவே பெற்று இருந்தார். இதனால் நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜெர்மனி அதிபர் தோல்வியை தழுவினார். பிப்ரவரியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து ஷோல்ஸுடனான கூட்டணி அரசாங்கத்திலிருந்து சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) வெளியேறிய பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Defeat in vote of confidence Olaf Scholzin loses German chancellor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->