பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 3 மாணவர்கள் பலி; 9 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் இயங்கி வரும் ஒரு பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளி வளாகத்தில், 17 வயது மாணவி ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமுற்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதற்கிடையே போலீசாரை பார்த்ததும் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவியும் தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து போலீசார் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக, அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three students died and nine students injured for gun shoot in america


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->