போதைப்பொருள் கடத்தியதாக காஷ்மீரில் 217 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


போதைப்பொருள் கடத்தியதாக காஷ்மீரில் 217 பேர் கைது.!

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்தக் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், காஷ்மீர் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதன் படி, பாரமுல்லா மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரைக்கும் 217 போதைப்பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

அத்துடன் அவர்களிடம் இருந்து சுமார் ரூ.7 கோடி மதிப்புள்ள ஐந்து கிலோ அளவிலான போதைப்பொருளையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தல்காரர்கள் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை சோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள். காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

217 peoples arrested for drugs kidnape and sale in kashmeer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->