கேதார்நாத் கோவிலில் 228 கிலோ தங்கம் திருட்டு! சங்கராச்சாரியார் பரபரப்பு குற்றசாட்டு! - Seithipunal
Seithipunal


கேதார்நாத் கோவிலில் இருந்த 228 கிலோ தங்கம் காணவில்லை என ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார்  குற்றம் சாட்டியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெறும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி தெரிவித்ததாவது, சிவபுராணத்தில் 12 ஜோதிர் லிங்க தலங்கள் குறித்த விவரங்கள் உள்ளன.

அந்தப் புராணத்தில் இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் குறித்த குறிப்புகளும் அடங்கும். இமயமலையில் கேதார்நாத் கோவில் இருக்கும்போது எப்படி டெல்லியில் கேதார்நாத் கோவிலை கட்ட முடியும். இதற்குப் பின்னால் பல்வேறு அரசியல் காரணங்கள் உள்ளது. அரசியல்வாதிகள் நமது மத வழிபாடு தளங்களுக்கும் நுழைய பார்க்கிறார்கள்.

தொடர்ந்து பேசிய அவர் தெரிவித்ததாவது, கேதர்நாத் கோவில் கருவறை சுவற்றில் தங்கத் தகடு பொருத்தப்பட்டு இருந்தது. அதில் 228 கிலோ தங்கத்தை தகடு காணாமல் போனதாக எழுந்த புகார் குறித்து ஏன் இதுவரை விசாரணை நடத்தவில்லை.

இப்போது டெல்லியில் ஒரு கேதார்நாத் கோயில் கட்ட திட்டம் போடுகிறார்கள். இன்னொரு மோசடி நடக்காமல் நாம் இவர்களை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

228 kg of gold from Kedarnath temple is missing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->