ராஜஸ்தானில் 25 புலிகளை காணவில்லை!...1/3 பங்கு குறைந்த அதிர்ச்சி தகவல் வெளியீடு! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெரிய பாலைவனமான தார் பாலைவனம் அமைந்துள்ள ராஜஸ்தான் மாநிலத்தில், ரந்தம்பூர் தேசிய பூங்கா உள்ளது. இந்த நிலையில், பூங்காவில் 25 புலிகள் கடந்த ஆண்டில் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் தெரிவித்துள்ளதாவது,  ரந்தம்பூர் பூங்காவில்
கடந்த ஜனவரி 2019 முதல் ஜனவரி 2022 வரை 13 புலிகள் காணாமல் போனதாக அதிர்ச்சி  தகவல் வெளியானது. இது  குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், புலிகள் காணாமல் போனதற்கு பூங்கா அதிகாரிகள் கவனக்குறைவு என்று விசாரணையில் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இது குறித்து 2 மாதங்களுக்குள் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று கூறிய அவர், சமீபத்தில் வாராந்திர கண்காணிப்பு அறிக்கைகள் சேகரித்த போது, 75 புலிகளில் 25 புலிகள் கடந்த ஆண்டில் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார். இது மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 tigers are missing in rajasthan less shock information release


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->