தொடரும் சோகங்கள்! இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பில் சிக்கி 28 பேர் மாயம்!
28 people lost in cloudburst in Himachal Pradesh
இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லா மற்றும் மண்டியில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 28 பேர் மாயமாகியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. ஹிமாச்சலத் பிரதேச மாநிலத்தில் சிம்லா மற்றும் மண்டியில் பெய்து வரும் கனமழைய காரணமாக ஆய்வான பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது.
நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருவதால் பொதுமக்கள் வெளியே வர முடியாத சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரின் பல்வேறு நகரங்களில் நம் மக்கள் உணவு இன்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சிம்லா மற்றும் மண்டியில் ஏற்பட்ட மேகவெடிப்பினால் பெய்த கனமழையில் சிக்கி இதுவரை 19 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி நீங்குவதற்குள், மண்டி அருகே தட்டுகேட் என்ற இடத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி 9 பேர் காணவில்லை என்று தகவல் வெளியாகி இமாச்சலப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மிக வெடிப்பினால் ஏற்பட்ட கனமழை காரணமாக பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்தசேகமடைந்துள்ளது.
நகரின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த பகுதிகளில் மீட்டு குழு தீவிரமாக மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையில் இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக பெய்து வரும் கனமழையால் இதுவரை 28 பேர் மாயமாகியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
28 people lost in cloudburst in Himachal Pradesh