கர்நாடகா || நொடியில் இடிந்து விழுந்த 3 மாடிக் கட்டிடம் - பதைபதைக்க வைத்த சம்பவம்..! - Seithipunal
Seithipunal


கோலார் மாவட்டத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம் பங்கராபேட்டை நகரில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் அந்த கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கட்டிடம் இடிந்து விழுந்த போது  பேர் மட்டும் இருந்துள்ளதால், அவர்களை மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதற்கிடையே இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

கட்டிடம் இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் வெளிப்புறச் சுவர் சேதமடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 floor building collapse in karnataga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->