அசாம்: விசா விதிமுறைகளை மீறிய சுவீடன் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


பல தேவாலயங்களின் அமைப்பான யுனைடெட் சர்ச் பெல்லோஷிப் ஏற்பாடு செய்த பிரார்த்தனை கூட்டம் அதிகாரிகளின் அனுமதியுடன் நடத்தப்படுகிறது. இந்நிலையில் அசாம் திப்ருகார் மாவட்டத்தில் மூன்று நாள் பிரார்த்தனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இங்கு சுற்றுலா விசாவில் இந்தியா வந்த சுவீடன் நாட்டை சேர்ந்த 3 பேர், விசா விதிமுறைகளை மீறி புதன்கிழமை திப்ருகார் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இதையடுத்து போலீசார் சுற்றுலாப் பயணிகள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையில், அவர்கள் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர்கள் ஹன்னா மைக்கேலா ப்ளூம், மார்கஸ் ஆர்னே ஹென்ரிக் ப்ளூம் மற்றும் சுசன்னா எலிசபெத் ஹகனாசன் ஆகிய 3 பேரும், சொந்த நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு துணை கமிஷனர் மற்றும் மாவட்ட காவல்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. 

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் மூவரும், இன்று கவுகாத்திக்கு அனுப்பப்பட்டு பின்னர் சுவீடனுக்கு அனுப்பப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 Swedes arrested for violating visa regulations


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->