கேரளாவில் பெரும் சோகம்; மசாலா தோசை சாப்பிட்ட 03 வயது சிறுமி உயிரிழப்பு..!
3 year old girl dies after eating masala dosa in Kerala
கேரளாவில் மசாலா தோசை சாப்பிட்ட 03 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் திருச்சூர் மாவட்டம் வெண்டூர் பகுதியை சேர்ந்தவர் 42 வயது ஹென்றி இவரது மகள் ஒலிவியா, 03 வயது. வெளிநாட்டில் வேலை செய்து வந்த அவர், கடந்த 19-ந் தேதி வெளிநாட்டில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து அவரை, அவரது மனைவி மற்றும் தாய், ஒலிவியா ஆகிய 03 பேர் அழைத்து சென்றுள்ளனர்.
அவர்கள் வீட்டுக்கு வரும் வழியில் அங்கமாலி அருகே உள்ள ஒரு ஓட்டலில் 04 பேரும் மசால் தோசை சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து வீடு திரும்பிய பின்னர் ஹென்றிக்கு மயக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதை தொடர்ந்து ஹென்றியின் மனைவி தாய், ஒலிவியா ஆகிய 03 பேருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஆனால் சிறுமிக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது. மேலும், வெண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஒலிவியா பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதனை அடுத்து, புதுக்காடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
3 year old girl dies after eating masala dosa in Kerala