'அக்யூஸ்ட்' படத்தின் டீசரை வெளியிட்டுள்ள நடிகர் கார்த்தி..! - Seithipunal
Seithipunal


கன்னட இயக்குனரான பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள படம் 'அக்யூஸ்ட்'. இந்த படத்தில் 'திருநெல்வேலி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் உதயா கதாநாயகனாக நடித்துள்ளார்.  பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். இவருடன் அஜ்மல், யோகி பாபு, பிரபு சாலமன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்த 'அக்யூஸ்ட்' படத்தின் ஒளிப்பதிவினை மருதநாயகம் என்பவரும், படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைப்பு மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த'அக்யூஸ்ட்'பட டீசரை நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Karthi has released the teaser of the film Accused


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->