மும்பையில் 36 விமானங்கள் ரத்து - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாகவே நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் கோவாவில் கனமழை பெய்து வருகிறது. இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், மும்பையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது, விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 12 விமானங்கள் உள்பட இண்டிகோவின் 24 விமானங்களும், ஏர் இந்தியாவின் எட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இதேபோல், மும்பை விமான நிலையத்தில் விஸ்தாரா தனது நான்கு விமானங்களையும் ரத்து செய்துள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாசா உட்பட குறைந்தது 15 விமானங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு மாலை 4 மணி வரை திருப்பி விடப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

36 flight service affected in mumbai for rain


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->