ஒரே நேரத்தில் 36 செயற்கைகோள்கள் - நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் வரலாற்று சாதனை..!
36 satellites in sriharikotta
ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்து உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இங்கிலாந் நாட்டைச் சேர்ந்த ஒன் வெப் என்ற நிறுவனத்தின் முப்பத்தாறு செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
அதிக எடை கொண்ட இந்த செயற்கைகோள்களை வணிக நோக்கத்தின் காரணமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் ஜி.எஸ்.எல்.வி.-எம்.கே3 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துகிறது. இதற்காக ஒன் வெப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு வசதிக்காக 36 செயற்கைகோள்களும் உலகம் முழுவதும் ஏவப்படுகின்றன. இந்நிலையில், இந்த 36 செயற்கைகோள்களும் நேற்று ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திற்கு வந்து சேர்ந்தன.
செயற்கைகோள்களில் வழக்கமாக நடக்கும் பரிசோதனைகளை முடித்த பிறகு அவற்றை விண்ணில் ஏவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவது தங்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணமாக இருக்கும் என்று நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் தெரிவித்துள்ளது.
English Summary
36 satellites in sriharikotta