நாளை முதல் ஆட்டம் ஆரம்பம்! இடி, மின்னல், கனமழை, சூறாவளி காற்று - வானிலை ஆய்வு மையம் கொடுத்த எச்சரிக்கை!
Chennai IMD Report Rain Alert
சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. அதேபோல தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், இன்று (நவ, 6-ந்தேதி) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை கடலோர தமிழகத்தின் சில இடங்களிலும் உள் தமிழகத்தில் சில பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்காலிலும் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
வரும் 8-ந்தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வரும் 9-ந்தேதி தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகரில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திராவின் கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால், 8-ந்தேதி வரை மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
English Summary
Chennai IMD Report Rain Alert