வேலூர் சிறையில் கைதி தாக்கு!...11 பேரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


வேலூர் சிறை கைதி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், ஏற்கனவே 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூர் மத்திய சிறையில் குற்ற வழக்குகளில் அதிகம் ஈடுபடும் நபர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில், ஆயுள் தண்டனை கைதியாக இருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் இருந்து வருகிறார். இவரை வேலூர் சிறைத்துறை அதிகாரி ராஜலட்சுமியின் இல்லத்தில் வீட்டு வேலைக்கு பயன்படுத்தியாகவும், அப்போது அவர் திருட்டில் ஈடுபட்டதாகவும் கூறி, சிறையில் வைத்து அவர் மீது தாக்குதல் நடத்தியாக, அவரது தாயார் வழக்கு தொடர்ந்தார்.  

அதன்படி, சிபிசிஐடி காவல்துறையினர் 14 பேர் மீது ( சிறைத்துறை அதிகாரி, எஸ்.பி உள்ளிட்ட 14 பேர்) வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் முன்னதாக சிறைத்துறை டிஐஜி, எஸ்.பி,சிறை வார்டன் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், மேலும் 11 பேரை தற்போது பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prisoner attack in vellore jail 11 persons dismissed and dig orders action


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->