இந்திய வம்சாவளி எம்.பி.! அமெரிக்க தேர்தலில் மீண்டும் வெற்றி!
MP of Indian origin Victory in the American election again
சிகாகோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 பேர் போட்டியிடுகின்றனர். அதில் 5 பேர் தற்பொழுது அமெரிக்க பிரதிநிதி மன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இவர் சிகாகோவில் வடமேற்கு பகுதி மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய இல்லினாய்ஸ் மாநிலத்தின் 7-வது தொகுதியில் எம்.பி.யாக உள்ளார்.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ராஜா கிருஷ்ணமூர்த்தி, கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரீசை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தெற்காசிய வாக்காளர்களை குறிவைத்து அவர் மேற்கொண்ட பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அமெரிக்க சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பியோரியில் வளர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் எந்திர என்ஜினீயரிங் பயின்று, ஹார்வர்டு சட்டப்பள்ளியில் பட்டம் பெற்றவர். இவர் உளவுத்துறை மற்றும் மேற்பார்வை குழுக்களில் பணியாற்றியுள்ளார். கடந்த ஆகஸ்டு மாதம் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தபோது, அந்நாட்டு அரசாங்கத்திடம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருந்தார்.
இவரது குடும்பம் இல்லினாய்ஸின் ஷாம்பர்க் பகுதியில் வசித்து வருவதுடன், மனைவி பிரியா டாக்டராக உள்ளார். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
English Summary
MP of Indian origin Victory in the American election again