செந்தில்பாலாஜிக்கு விரைவில் சிறை... CM ஸ்டாலின் சொல்லி முடித்த கையோடு பாஜக போட்ட டிவிட்! - Seithipunal
Seithipunal


கோவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவிக்கையில், "கோவை மாவட்டத்திற்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி COME BACK கொடுத்துள்ளார். 
 
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜியின் சிறப்பான செயல்பாடுகளை பார்த்து நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினார்கள்.

ஆனால், அந்த தடைகளை எல்லாம் உடைத்து மீண்டு வந்திருக்கிறார், தொடர்ந்து கோவைக்காக அவர் சிறப்பாக செயல்படுவார் அது உறுதி... உறுதி...” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேசி இருந்தார்.

இந்நிலையில், பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "Come Back கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி, அவரின் சிறப்பான, வேகமான செயல்பாடுகளை பார்த்து நடுவில் தடைகளை ஏற்படுத்தினார்கள் என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஆனால், அவரின் மோசமான, வேகமான செயல்பாடுகளை அலசி, ஆராய்ந்து இடைக்கால தடையை உடைத்து விரைவில்   'Go Back' சொல்லும் நீதிமன்றம்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அதாவது விரைவில் செந்தில்பாலாஜி சிறைக்கு செல்வார் என்று மறைமுகமாக நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan thirupathy say about DMK MKStalin SenthilBalaji Kovai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->