தேநீர் வியாபாரி 3வது முறை பிரதமர்! பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் விரக்தி - பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் எப்படி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார் என்பதை நினைத்து எதிர்க்கட்சியினர் விரக்தி அடைந்துள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி எம்.பிக்களுக்கு உற்சாக வரவேற்பளித்தார்.

பின்னர் எம்.பிக்கள் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், நேருக்கு பிறகு இந்திய வரலாற்றில் பலர் நேரடியாகவும் சில ரிமோட் கண்ட்ரோல் மூலமாகவும் பிரதமர் ஆகியுள்ளார்கள்.

நேருக்குப் பிறகு ஒரு தேநீர் வியாபாரி தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்று இருப்பதை நினைத்து எதிர்க்கட்சியினர் கவலை அடைந்துள்ளனர். 

காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் எப்படி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார் என்பது நினைத்து எதிர்க்கட்சியினர் விரக்தி அடைந்துள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3rd time Prime Minister Opposition parties despair PM Modi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->