ஆந்திரா: ஓடும் ஆட்டோவில் திருநங்கைக்கும் பாலியல் தொந்தரவு - 4 பேர் கைது - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் ஓடும் ஆட்டோவில் திருநங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் 26 வயது திருநங்கை. இவர் சம்பவத்தன்று இரவு ஜெகதாம்பா சந்திப்பு பகுதியில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு ஆட்டோவில் வந்தார். அப்பொழுது ஆட்டோவில் ஏற்கனவே இருந்த மூன்று வாலிபர்கள் திருநங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

மேலும் இதை தடுக்க முயன்ற திருநங்கையை அடித்து துன்புறுத்துள்ளனர். இதனால் திருநங்கை கூச்சலிடவே அவர்கள் ஆட்டோவை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து ஆட்டோவிலிருந்து இறங்கி, அவர்களிடமிருந்து தப்பிய திருநங்கை இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது ஆட்டோ டிரைவர் வாசுபள்ளி சீனிவாசு (33), ஹனிஷ்குமார்(26), சதீஷ்குமார் (30) மற்றும் மனோஜ் குமார் ( 23) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இது ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 people arrested for sexually harassing a transgender in a moving auto in Andhra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->