நள்ளிரவில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை - 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரோசாபாத் மாவட்டம் நவ்ஷெரா பகுதியில் வீடு ஒன்றில் பட்டாசு ஆலை குடோன் மற்றும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், இந்த ஆலையில் நேற்றிரவு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 3 வயது சிறுமி, ஒரு பெண் உள்பட மொத்தம் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:- "மொத்தம் 10 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்து விட்டனர். 

இடிபாடுகளில் வேறு சிலரும் சிக்கியிருக்க கூடும். இதனால், தீயணைப்பு மற்றும் காவல் துறையினர், மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 proples died firecrackers factory blast in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->